சேலம் மாநகராட்சியில் 85 பள்ளிகளில் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பு ஆணையாளர் தகவல்


சேலம் மாநகராட்சியில் 85 பள்ளிகளில் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பு ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:15 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 85 பள்ளிகளில் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பு நடைபெறும் என ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளை நேற்று சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணை யாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

அன்றாட வாழ்வில் நாம் ஈடுபடும் பணிகளில் அறிவியல் சார்ந்துள்ளது. இதை மாணவ, மாணவிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் அறிவியல் தொடர்பான கேள்விகள் அனைத்துமே நம் வாழ்வியல் முறைகளில் உள்ள அறிவியலை சார்ந்தே கேட்கப்படுகின்றன.

அறிவியலை எளிதாகவும் மாணவ, மாணவிகள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து செல்வதால், எதிர் காலத்தில் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வதற்கும், உயர் கல்வி கற்பதற்கும் ஏதுவாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு இப்பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலத்தின் மூலமாக மட்டுமே விளக்கப்படக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும், தமிழ் மொழியின் மூலம் தெளிவு படுத்தும் போது, அறிவியல் தொடர்பான விவரங்கள் மாணவ, மாணவிகளை எளிதாக சென்றடையும்.

இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தங்களது அறிவியல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் மாநகராட்சிக்கு உட்பட்ட 85 பள்ளிகளில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகன்யா தமிழ்செல்வி, துணை தலைமை ஆசிரியர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் ரவிசந்தர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பரிக்‌ஷன் அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story