பதுக்கி வைத்திருந்த 52 யூனிட் மணல் பறிமுதல் வருவாய்த்துறையினர் நடவடிக்கை


பதுக்கி வைத்திருந்த 52 யூனிட் மணல் பறிமுதல் வருவாய்த்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Jun 2018 4:00 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் கிராமத்தில் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் கிராமத்தில் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர்கள் கரிமலை, துரை, சுரேஷ், குமார் மற்றும் உதவியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கெங்காபுரம் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 52 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.

மேலும் மணலை பதுக்கி வைத்திருந்தவர் யார்? என்று வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story