போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் அதிரடி வாகன சோதனை: 3 ஆட்டோக்கள் பறிமுதல்


போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் அதிரடி வாகன சோதனை: 3 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Jun 2018 5:30 AM IST (Updated: 29 Jun 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து வாகன சோதனை நடத்தினர்.உரிய ஆவணங்கள் இல்லாத 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி,

புதுவையில் நேற்று போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து வாகன சோதனை நடத்தினர்.உரிய ஆவணங்கள் இல்லாத 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர் ராவ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரவிசங்கர், சுந்தர், கிழக்கு பகுதி போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் நேற்று மாலை இந்திராகாந்தி சிலை அருகில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையின் போது புதுவை அரசு போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்பட்ட வாகன சோதனை முகாமில் இந்த வாகனங்கள் கலந்து கொண்டு தகுதி சான்றிதழ் பெற்றுள்ளனவா? உரிய ஆவணங்கள் உள்ளனவா? வாகனத்தில் அவசர வழி உள்ளதா? தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளனவா? முதலுதவிப்பெட்டியில் உள்ள மருந்துகள் காலாவதியாகி உள்ளனவா? என்று சோதனை நடத்தினர். மேலும் அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதா? உரிய ஆவணங்கள் உள்ளனவா? சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 10 வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதில் 7 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



Next Story