விழுப்புரம் நகரில் சாலை விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம் நகரில் சாலை விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் சாலை விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை சுழற்சி முறையில் மாதத்திற்கு முதல் 15 நாட்கள் சாலையின் வலதுபுறமும், அடுத்த 15 நாட்கள் இடதுபுறமும் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதில் சென்று வர ஏதுவாக, நகரில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து மாதா ஆலயம் வரை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நேற்று விழுப்புரம் தாசில்தார் சுந்தர்ராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விழுப்புரம் நேருஜி சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு சாலையை அகலப்படுத்துவது குறித்தும், நேருஜி சாலையில் உள்ள வீரவாழி மாரியம்மன் கோவில், ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் உள்ள முருகன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களை சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இன்றி நகர்த்தி வைப்பது குறித்து ஆலோசனை செய்தனர்.
மேலும் காந்தி சிலையை சுற்றிலும் ரவுண்டானா அமைக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி னர். அதோடு இந்த சாலை விரிவாக்க பணிக்காக கட்டிடங்கள், கடைகளை அகற்றும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்குமாறு போலீசாரிடம் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Related Tags :
Next Story