மகாடா பெயரில் 26 போலி இணையதள பக்கங்கள்


மகாடா பெயரில் 26 போலி இணையதள பக்கங்கள்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:31 AM IST (Updated: 29 Jun 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

மகாடா பெயரில் 26 போலி இணையதள பக்கங்கள் உருவாக்கிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

மராட்டிய அரசின் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையமான மகாடா அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகளை கட்டி குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இதற்காக மகாடாவில் வீடு வாங்க விரும்புபவர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மகாடா சார்பில் மும்பை பாந்திரா சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், மகாடா பெயரில் பல போலி இணையதள பக்கங்கள் தொடங்கி மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், மகாடா பெயரில் 26 போலி இணையதள பக்கங்கள் தொடங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த போலி இணையதள பக்கங்களை முடக்கினர். மேலும் போலி பக்கங்களை தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story