பி.யூ.சி. 2-ம் ஆண்டு துணை தேர்வு இன்று தொடங்குகிறது
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்று அதன் தேர்வு முடிவுகள் வெளிவந்தன.
பெங்களூரு,
பி.யூ.சி. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணை தேர்வு கடந்த 8-ந் தேதி தொடங்க இருந்தது. பின்னர், இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
அதன்படி, பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான துணை தேர்வு இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்தமாதம்(ஜூலை) 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 301 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2.5 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இன்று சமூகவியல், கணக்குபதிவியல், கணிதம் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.
தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. சில பாடங்களின் தேர்வுகள் மட்டும் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.45 மணிக்கு முடிவடைகின்றன. தேர்வில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், மாணவர்கள் காப்பி அடிப்படை தவிர்க்கவும் பி.யூ.சி. கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Related Tags :
Next Story