தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கடலூர், சிதம்பரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கடலூர், சிதம்பரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2018 5:45 AM IST (Updated: 29 Jun 2018 5:40 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கடலூர், சிதம்பரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர

கடலூர்,

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கடலூர், சிதம்பரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் விஜயவர்மன் வரவேற்று பேசினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் பழ.தாமரைகண்ணன், மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் மாநில துணைப்பொதுச்செயலாளர் தர்மலிங்கம், துணை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜ்குமார், வன்னியர் சங்க துணைத்தலைவர் தனசேகர், மாவட்ட துணைச்செயலாளர் ரமேஷ், போஸ்.ராமச்சந்திரன், வாட்டர்மணி, ஏ.சி.மணி, வடலூர் வன்னியர் சங்க நகர தலைவர் பிரபு, மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

இதே போல் சிதம்பரம் காந்தி சிலை அருகே பா.ம.க.வினர் தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன், மாநில தொழிற்சங்க தலைவர் வீரமணி, மாவட்ட துணைத்தலைவர் பால்ஸ்ரவிக்குமார், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் கல்லீஸ் வரவேற்றார். பா.ம.க. தேர்தல் பணிக்குழுத் தலைவர் அருள்மொழி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசஞ்சீவி, அருள், மாவட்ட துணைத்தலைவர்கள் சவுராஜா, சரவணன் மற்றும் நிர்வாகிகள் ராஜதுரை, சண்முகம், கர்ணாஆனந்த், கருணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story