தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு 8–ந்தேதி நடக்கிறது
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு வருகிற 8–ந்தேதி நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு வருகிற 8–ந்தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
ஊர்க்காவல் படைதூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக 43 ஆண் மற்றும் 9 பெண் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு வருகிற 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த பணியில் ஆர்வம் உள்ள பொதுமக்கள், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் புரிவோர் தேர்வு நாளில் நேரில் கலந்து கொள்ளலாம்.
தகுதிகள்ஊர்க்காவல் படையில் சேர வயது 20–ல் இருந்து 45–க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் நல்ல உடல்திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வில் கலந்துகொள்ள வருபவர்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களது 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், 2 தபால் அட்டைகள் ஆகியவற்றுடன் கலந்துகொள்ள வேண்டும்.
ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல்துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். பணிபுரியும் ஒவ்வொரு நாளும் மதிப்பூதியமாக ரூ.560 வழங்கப்படும். எனவே ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.