திருச்சி அருகே ரூ.77 கோடியில் அமைக்கப்பட்ட : கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் இன்று பயன்பாட்டுக்கு வருகிறது
திருச்சி அருகே ரூ.77 கோடியில் அமைக்கப்பட்ட கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
திருச்சி,

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடி என்ற இடத்தில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து ரூ.77 கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணொலி காட்சி மூலம் இதனை திறந்து வைத்தார். ஆனாலும் இந்த வணிக வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் மூடப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.
திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காந்திமார்க்கெட் பகுதி போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் கள்ளிக்குடி வணிக வளாகத்துக்கு மாற்றம் செய்வது தான் இதன் முக்கிய நோக்கமாகும். ஆனால் வியாபாரிகள் நடத்திய போராட்டம் காரணமாக காந்திமார்க்கெட்டில் உள்ள கடைகளை உடனடியாக கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்றம் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் இன்று (சனிக்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக இன்று காலை அங்கு நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் மொத்தம் 1000 கடைகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக இன்று சுமார் 300 கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன. கடைகளை நடத்துவதற்கு ஒதுக்கீட்டு ஆணை பெற்ற வியாபாரிகள் நேற்று கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்திற்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை திறந்து தராசு மற்றும் தளவாட பொருட்களை எடுத்து வைக்கும் வேலைகளை தொடங்கினார்கள். உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட சில பொருட்களும் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டன.
ஜூன் 30-ந்தேதி முதல் காந்திமார்க்கெட்டிற்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவதற்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தடை விதித்து உத்தரவிட்டார். எனவே இன்று முதல் வெளியூர்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள் அனைத்தும் கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story