மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்து யாதவ், துணைத் தலைவர் சீனிவாஸ் மற்றும் நிர்வாகிகளை தாக்கிய போலீசாரை கண்டித்தும், போலீசாரை ஏவி விட்டதாக மத்திய அரசை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.ஆர்.கோபி தலைமை தாங்கினார். பெரம்பலூர் நகர தலைவர் காமராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் மதன், வட்டார தலைவர் ரெங்கராஜ் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கிய போலீசாரை கண்டித்தும், அதற்கு உடந்தையாக இருந்ததாக மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தலைவர் விவேக், குன்னம் தொகுதி தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story