கூடலூர் அருகே புலிதான் மாடுகளை அடித்து கொன்றது, கேமராவில் பதிவான காட்சியை வனத்துறையினர் வெளியிட்டனர்


கூடலூர் அருகே புலிதான் மாடுகளை அடித்து கொன்றது, கேமராவில் பதிவான காட்சியை வனத்துறையினர் வெளியிட்டனர்
x
தினத்தந்தி 29 Jun 2018 10:30 PM GMT (Updated: 29 Jun 2018 6:33 PM GMT)

கூடலூர் அருகே புலிதான் 2 மாடுகளை அடித்து கொன்றது என்று வனத்துறையினர் கூறினார்கள். இது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டனர்.

கூடலூர்,

வால்பாறையில் பெண் ஒருவரை கடித்து கொன்ற சிறுத்தை புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிடித்து முதுமலை வனத்தில் விட்டனர். இந்த நிலையில் கூடலூர் நம்பிக்குன்னு கிராமத்துக்குள் புகுந்து 2 மாடுகளை அடித்து கொன்றது அந்த சிறுத்தைப்புலிதான். ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.இது குறித்து முதுமலை வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுத்தை புலி மாடுகளை கடித்து கொன்ற இடத்தில் ஆய்வு நடத்தினர்.இது குறித்து வனத்துறையினர் தரப்பில் கூறியதாவது:–

வால்பாறையில் பிடித்து கர்நாடகா எல்லையில் விட்ட சிறுத்தைப்புலி முதுமலை ஊராட்சிக்குள் நுழைந்து மாடுகளை கொல்ல வில்லை. இது குறித்து அப்பகுதியில் ஏற்கனவே வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் நம்பிக்குன்னு கிராமத்தில் சுமார் 11 வயதான ஆண் புலி புகுந்து மாடுகளை கடித்து கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே ஊராட்சி மக்கள் பீதி அடைய வேண்டாம். முதுமலையில் உள்ள புலிகளின் எண்ணிக்கைப்படி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள புலியின் எண்ணிக்கை 23 ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் நம்பிக்குன்னு கிராமத்தில் பசு மாட்டை புலி அடித்து சாப்பிடும் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். அதில் புலி அப்பகுதிக்கு வருவதையும், பின்னர் மாட்டின் உடலில் உள்ள இறைச்சியை கடித்து தின்னும் சம்பவம் பதிவாகி இருந்தது.


Next Story