போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி திருச்சி காந்திமார்க்கெட்டை மூடினால் போராட்டம் நடத்தி சிறை செல்வோம்
போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி காந்திமார்க்கெட்டை மூடினால் போராட்டம் நடத்தி சிறை செல்வோம் என்று வெள்ளையன் கூறினார்.
திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்கள் சார்பில் ‘காந்திமார்க்கெட் இங்கேயே இயங்கும்’ என்ற தலைப்பில் கவன ஈர்ப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ஷபி அகமது, வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மற்றும் பல்வேறு வியாபார சங்க பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காந்திமார்க்கெட் சில்லறை வியாபாரிகளை காக்க அவர்கள் இதே மார்க்கெட்டில் தொடர்ந்து வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும், காந்திமார்க்கெட் வெளிப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், லாரிகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நகருக்குள் வர அனுமதித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம், சீர்மிகு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டிக்காக காந்திமார்க்கெட் இடத்தை கையகப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் பழைய பால்பண்ணை, மகளிர் சிறை போன்ற பகுதியில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக வெள்ளையன் காந்திமார்க்கெட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி காந்திமார்க்கெட்டுக்கு என்று நீண்ட வரலாறு உள்ளது. இந்தியாவிலேயே தேச தந்தை மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே மார்க்கெட் என்ற பெருமை இதற்கு உண்டு. போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்காக இதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது. போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க மாவட்ட மாநகராட்சி நிர்வாகங்கள் வேறு வழி என்ன என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும்.
காந்திமார்க்கெட்டை மொத்தமாக கள்ளிக்குடிக்கு மாற்றம் செய்தால் வியாபாரிகள் மட்டும் இன்றி விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதில் பல பிரச்சினைகள் ஏற்படும். போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி காந்திமார்க்கெட்டை மூடினால் வணிகர்கள் போராட்டம் நடத்தி சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story