திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது வேன் மோதி தொழிலாளி சாவு


திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது வேன் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 30 Jun 2018 3:30 AM IST (Updated: 30 Jun 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது வேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் வேள்ளாத்து கோட்டை ரெட்டி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது உறவினர் மகன் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை வெங்கல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்க நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார்சைக்கிளில் ரமேஷ் சென்றார். சீத்தஞ்சேரி-வெங்கல் நெடுஞ்சாலையில் கல்பட்டு கிராமம் திம்ஸ்மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வெங்கல் கிராமத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த வேன் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் விரைந்து சென்று பலியான ரமேஷின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story