அதிக இரைச்சல் எழுப்பும் ‘சைலன்சர்’ பொருத்திய 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மோட்டார் சைக்கிள்களில் ஒரிஜினல் ‘சைலன்சர்’களை கழற்றி விட்டு, அதிக இரைச்சல் எழுப்பக்கூடிய புதிய ‘சைலன்சர்’களை பொருத்திக்கொண்டு வலம் வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னையில் இயக்கப்படும் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களில் ஒரிஜினல் ‘சைலன்சர்’களை கழற்றி விட்டு, அதிக இரைச்சல் எழுப்பக்கூடிய புதிய ‘சைலன்சர்’களை பொருத்திக்கொண்டு வலம் வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைவதுடன், விபத்துகளும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து போக்குவரத்து துணை கமிஷனர் சிவகுமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக அதிக இரைச்சல் எழுப்பக்கூடிய ‘சைலன்சர்’களை பொருத்தி, அதிக சத்தம் எழுப்பியபடி வந்த 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். ஒரு வாகனத்துக்கு தலா ரூ.2,600 வீதம் அபராதமும் விதித்தனர். மேலும் அதிக சத்தம் எழுப்பும் புதிய ‘சைலன்சர்’களை அகற்றிவிட்டு, சத்தம் குறைவாக வரும் பழைய ‘சைலன்சரை’ பொருத்திய பிறகுதான் மோட்டார் சைக்கிளை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இதுபோல் சத்தம் அதிகமாக எழுப்பும் ‘சைலன்சர்’களை பொருத்தக்கூடாது. மீறினால் அது சம்பந்தப்பட்ட மெக்கானிக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இதுபோல் சிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர்.

Related Tags :
Next Story