திருவிடைமருதூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவிடைமருதூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவேண்டும் என மேலையூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர்,
திருவிடைமருதூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவேண்டும் என மேலையூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மேலையூர், பவுண்டரீகபுரம் ஆகிய பகுதிகளில் காவிரி தண்ணீர் வராத நிலையில் விவசாயம் செய்வதையே சிலர் கைவிட்ட நிலையில் கடன்பெற்று பம்பு செட் மூலம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. நெல் மூட்டைகளை பாதுகாக்க இடமில்லாததாலும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்காததாலும் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம், கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் திருவிடைமருதூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மேலையூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story