வேலூரில் பி.எப். சந்தாதாரர்கள் குறை தீர்வு கூட்டம்


வேலூரில் பி.எப். சந்தாதாரர்கள் குறை தீர்வு கூட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:54 AM IST (Updated: 30 Jun 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பி.எப். சந்தாதாரர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

வேலூர்,

வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) செலுத்தும் உறுப்பினர்களுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது. அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சந்தாதாரர்களுக்கும், 3 மணி முதல் 4 மணி வரை தொழிலதிபர்களுக்கும், 4 மணி முதல் 5 மணி வரை பி.எப். விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நடக்கிறது.

எனவே, உறுப்பினர்கள் குறைகளை தங்கள் பெயர், வருங்கால வைப்பு நிதி எண், ஓய்வூதிய எண் உள்ளிட்ட விவரங்களுடன் தெளிவாக எழுதி வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம், எஸ்.4, தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, பகுதி-3, சத்துவாச்சாரி, வேலூர் என்ற முகவரிக்கு வருகிற 6-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் sro.vellore@epfindia.in என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.

மேற்கண்ட தகவலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன வேலூர் மண்டல கமிஷனர் எஸ்.டி.சிங் தெரிவித்துள்ளார். 

Next Story