கூட்டணி ஆட்சியின் பொது செயல் திட்ட அறிக்கை தயாரானது சித்தராமையாவிடம் தாக்கல்
கூட்டணி ஆட்சியின் பொது செயல் திட்ட அறிக்கை தயாரானது. இந்த அறிக்கை சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியை சுமூகமாக நிர்வகிக்க முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முதல் கூட்டத்தில், பொது செயல் திட்டத்தை வகுக்க 5 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் உறுப்பினர்களாக காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், ஜனதா தளம்(எஸ்) சார்பில் மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, பண்டப்பா காசம்பூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அந்த குழுவினர் ஏற்கனவே பல முறை கூடி இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அந்த குழுவின் கூட்டம் வீரப்பமொய்லி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களான மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், எச்.டி.ரேவண்ணா, பண்டப்பா காசம்பூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பொது செயல் திட்டத்தில் 5 ஆண்களுக்கு தேவையான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முக்கியமாக விவசாய கடன் தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு எடுக்க குமாரசாமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.1.25 கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த பொது செயல் திட்ட அறிக்கை ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்படும் என்று வீரப்பமொய்லி கூறினார்.

Related Tags :
Next Story