தேசிய அளவில் பதக்கம் வென்றவர்கள் விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் தகவல்
தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற வீரர்– வீராங்கனைகள் விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தீர்த்தோஸ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற வீரர்– வீராங்கனைகள் விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தீர்த்தோஸ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
விளையாட்டு உபகரணம்2017–18–ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
தங்கம் வென்றவர்களுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்களும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்களும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பம்எனவே 2017–18–ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் (ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை) கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் தங்களின் பெயர், முழு முகவரி மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் 27.7.2018 அன்றுக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்ட பிரிவு, தூத்துக்குடி என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0461– 2321149 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.