அரசு ஆணை வெளியீடு பள்ளி கல்வி இயக்குனராக ராமேஸ்வரமுருகன் நியமனம்
பள்ளி கல்வி இயக்குனராக ராமேஸ்வரமுருகனை நியமித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் பொறுப்பு ஏற்கிறார்.
சென்னை,

பள்ளி கல்வி இயக்குனராக ராமேஸ்வரமுருகனை, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நியமித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளி கல்வி இயக்குனராக பணியாற்றி வந்த ரெ.இளங்கோவன் வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வுபெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து 1.7.2018 முதல் காலி ஏற்படும் பள்ளி கல்வி இயக்குனர் பணியிடத்திற்கு நிர்வாக நலன் கருதி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குனராக பணிபுரியும் வி.சி.ராமேஸ்வரமுருகனை பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரமுருகன் 2012-13-ம் ஆண்டு தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின்னர், 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பள்ளி கல்வி இயக்குனராகவும், அதையடுத்து மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தின் இயக்குனராகவும், பள்ளிசாரா கல்வி இயக்கக இயக்குனராகவும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் கூடுதல் திட்ட இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
ராமேஸ்வரமுருகன் 2-வது முறையாக பள்ளி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story