உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சைதை துரைசாமி தலைமையில் உயர்மட்டக்குழு அமைப்பு
எம்.ஜி.ஆரின் புகழை பரப்புவதற்காக உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
சென்னை,

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய சைதை துரைசாமி தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு குறித்த அறிமுக கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மனிதநேய ஐ.ஏ.எஸ். அகாடமியின் தலைவர் சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக வரலாற்றில் ஒரு சிலர் தான் சரித்திரத்தை உருவாக்குவார்கள், அதில் இடம்பெறுவார்கள். அப்படியாக உலக வரலாற்றில் சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் நடித்த திரைப்படத்தின் காட்சி அமைப்புகள், உரையாடல்கள், பாடல்கள், கதையம்சங்கள் என எதை எடுத்தாலும் வாழ்வியலுக்கான ஆய்வுக்குரியது.
எம்.ஜி.ஆரின் சேவையை, தியாகங்களை அங்கீகரிக்கும் வகையில், அவருடைய பெருமையை, புகழை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த உலக எம்.ஜி.ஆர். பேரவை. இது அரசியல் கலப்படமற்றது. ரோட்டரி சங்கம், ஒய்.எம்.சி.ஏ., ராமகிருஷ்ண மடம் போன்று உலக எம்.ஜி.ஆர். பேரவையும் பல்வேறு சமூக சேவைகளை வழங்கும்.
மேலும், எம்.ஜி.ஆரின் தொடக்கம் முதல் இன்று வரை அவருடைய புகழை பரப்பி வரும் லட்சக்கணக்கான குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு இலவச கல்வி வழங்க இருக்கிறோம். எம்.ஜி.ஆரின் பெயரில் ரத்த தான வங்கி நடத்த இருக்கிறோம்.
அவரின் புகழை வளர்ப்பதற்காக சென்னை பல்கலைக்கழகத்திலே அவரை பற்றி ஆய்வு செய்ய மனிதநேய அறக்கட்டளை ரூ.25 லட்சம் செலுத்தி, ஒரு இருக்கையை ஏற்பாடு செய்து இருக்கிறது.
உலக தமிழராய்ச்சி கழகத்திலே எம்.ஜி.ஆரை பற்றி ஆய்வு செய்வதற்கு ரூ.5 கோடி முதல்-அமைச்சர் ஒதுக்கி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் ஆய்வு என்பது லட்சக்கணக்கில் இருக்கிறது. அவருடைய அனுபவம் வேறு யாரிடத்திலும் இருக்காது. அவரை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மாணவர்களை உருவாக்க இருக்கிறோம்.
அந்த ஆராய்ச்சி மாணவர்கள் இனி வருகிற சமூகத்துக்கு எம்.ஜி.ஆர். யார்? அவரின் செயல்பாடு, நோக்கம், கொள்கை, வாழ்வியல் பண்புகள் என்ன? எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்? அவரிடம் மிகுந்து காணப்படும் பண்புகள் என்னென்ன? என்பதை ஆராய்ச்சி செய்வார்கள். அந்த ஆராய்ச்சி குறிப்புகள் இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
எம்.ஜி.ஆரின் புகழை பரப்பி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவர் புகழை பரப்புவதால் மற்றவர்களுக்கு தான் பெருமை. அவர் புகழின் புகழ். உலகில் எவ்வளவு உயர்வான வார்த்தைகள் இருக்கிறதோ? அந்த அத்தனை வார்த்தைகளுக்கு சொந்தக்காரர், எம்.ஜி.ஆர். தான்.
சமுதாய மறுமலர்ச்சிக்காக, மாற்றத்திற்காக, மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து, மக்களின் மாமனிதராக வாழ்ந்து மறைந்தாலும், வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆரின் புகழை பாதுகாப்பது தான் எங்களின் முக்கிய நோக்கம். உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு மூலம் எம்.ஜி.ஆரின் புகழ் புதிய பரிணாம திசையை நோக்கி செல்ல இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் கூறியதாவது:-
உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு வருகிற 15-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக திறந்தவெளி அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய மனிதநேய ஐ.ஏ.எஸ். அகாடமியின் தலைவர் சைதை துரைசாமி தலைமையில், உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் (நானும்), ஆர்.எம்.கே. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ், வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியின் தலைவர் நாஞ்சில் என்.வின்சென்ட், சத்யபாமா பல்கலைக்கழக நிர்வாக இயக்குனர் மரிய ஜீனா, நடிகை லதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் குறிஞ்சி வேந்தன், பிரான்ஸ் நாட்டின் எம்.ஜி.ஆர். பேரவை தலைவரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் முருகு பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, எம்.ஜி.ஆரின் நினைவு தூணை திறந்து வைக்கிறார். பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், எம்.ஜி.ஆர். மன்ற பிரதிநிதிகள், ரசிகர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் வருகை தர இருக்கின்றனர்.
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை எம்.ஜி.ஆரை பற்றிய பட்டிமன்றம், கவியரங்கம், இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் இசை நிகழ்ச்சி, ஜாக்குவார் தங்கத்தின் வீர விளையாட்டு, நாட்டுபுற கலைநிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
அதேபோல், எழுத்தாளர் மணவை பொன் மாணிக்கம் எம்.ஜி.ஆரை பற்றி எழுதிய புத்தகம் வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் இதேபோல் மாநாடு நடத்த இருக்கிறோம். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடக்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, பிரான்ஸ் நாட்டின் எம்.ஜி.ஆர். பேரவை தலைவரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் முருகு பத்மநாபன், நடிகை லதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story