துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி நித்திரவிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்


துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி நித்திரவிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்
x
தினத்தந்தி 1 July 2018 4:00 AM IST (Updated: 1 July 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய உள்ள சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நித்திரவிளையில் நேற்று மாலையில் தர்ணா போராட்டம் நடந்தது.

நித்திரவிளை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய உள்ள சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நித்திரவிளையில் நேற்று மாலையில் தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு முன்சிறை வட்டாரக்குழு செயலாளர் சிதம்பர கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லசுவாமி முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தங்கமணி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் விஜயமோகன், முன்சிறை வட்டாரக்குழு உறுப்பினர்கள் அலெக்ஸ், லலிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story