திண்டுக்கல்லில் மரக்குடோனில் பயங்கர தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
திண்டுக்கல் வேடப்பட்டியில் உள்ள மரக்குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திண்டுக்கல்,

திண்டுக்கல் வேடப்பட்டியில் உள்ள ஞானாந்தகிரிநகரை சேர்ந்த ஸ்ரீராம் மனைவி சீதாலட்சுமி. இவர், அந்த பகுதியில் மரத்தால் ஆன மேஜை, நாற்காலி, கட்டில் மற்றும் மெத்தை, ஷோபா ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதற்காக அவருடைய வீட்டின் அருகே மரக்குடோன் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அங்கு, மரச்சாமான்கள் மற்றும் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை ஊழியர்கள் வழக்கம்போல மரக்குடோனில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, மரக்குடோனில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
அதற்குள் மள, மளவென குடோன் முழுவதும் தீ பரவியது. உடனே திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். ஆனால், தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கு பரவும் சூழல் ஏற்பட்டது.
உடனே, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 2 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மரக்குடோனின் மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து தரைமட்டமாகின.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள், மரச்சாமான் கள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மரக்குடோனில் உள்ள இரும்பு கம்பியில் வெல்டிங் வைக்கும்போது தீப்பிடித்ததா? என்பது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story