பழனியில், வெவ்வேறு பகுதியில் கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
பழனியில் வெவ்வேறு பகுதியில் கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலியாகினர். நண்பர்களுடன் குளித்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
பழனி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் பழனி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரராஜன். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 14). இவன், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இவன், தனது நண்பர்களுடன் பழனி காரமடை அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றான். சிறிதுநேரம் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சந்தோஷ், திடீரென தண்ணீரில் மூழ்கினான்.
இதைப்பார்த்த நண்பர்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் அவர்கள் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே நீரில் மூழ்கிய சந்தோஷ் பரிதாபமாக இறந்தான். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதேபோல் பழனி கோதைமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் நந்தகுமார் (18). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற் காக விண்ணப்பித்திருந்தார்.
நேற்று இவர், நண்பர்களுடன் மதினாநகர் அஞ்சுகன்னி பாலம் அருகே உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது நந்தகுமார் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணறுகளில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Tags :
Next Story