திண்டுக்கல்லில் பயிற்சி முடித்த 218 போலீசாருக்கு பணிநியமனம்


திண்டுக்கல்லில் பயிற்சி முடித்த 218 போலீசாருக்கு பணிநியமனம்
x
தினத்தந்தி 1 July 2018 5:15 AM IST (Updated: 1 July 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் 218 பேர் பயிற்சி பெற்றனர்.

திண்டுக்கல்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு போலீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிகளில் 8 மாத பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் 218 பேர் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் சேரலாதன், ஜாஸ்மின்மும்தாஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு பயிற்சி காலம் நிறைவுபெற்றதால் வெவ்வேறு ஊர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி கோவை, சென்னை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி உள்பட 15 ஊர்களுக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து நேற்று மதியம் 218 பேரும் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இருந்து வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.

Next Story