அளவு குறைத்து விற்பனை பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்


அளவு குறைத்து விற்பனை பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 2 July 2018 3:30 AM IST (Updated: 2 July 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

கோவை போத்தனூர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அளவு குறைத்து பெட்ரோல் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர்.

போத்தனூர்,

கோவை போத்தனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அளவு குறைத்து பெட்ரோல் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story