நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குப்பைகளை சாலை ஓரமாக போட்டு தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி
நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் தினமும் குப்பைகளை அள்ளுவதற்கு பதில் சாலை ஓரமாக போட்டு தீ வைத்து கொளுத்துவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றன.
வண்டலூர்,
நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் தினமும் குப்பைகளை அள்ளுவதற்கு பதில் சாலை ஓரமாக போட்டு தீ வைத்து கொளுத்துவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றன. நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதி, தெருக்களில் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ளுவதற்கு பதில் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அப்படியே குடியிருப்பு மத்தியில் உள்ள காலி இடங்களில் போட்டு தீவைத்து கொளுத்தி வருகின்றனர்.
இதனால் வீடுகளை சுற்றி புகை மூட்டமாக காணப்படுகிறது. குழந்தைகளுக்கு கண் எரிச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது. முதியவர்களுக்கு மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதேபோல நந்திவரம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளி அருகே நந்திவரம் மலைமேடு, கோவிந்தராஜபுரம், கிருஷ்ணாபுரம் மற்றும் பெரியார் நகர் ஆகிய பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் கூடுவாஞ்சேரி கொட்டமேடு சாலையின் இரு புறங்களிலும் ஓரமாக போட்டு தீவைத்து தினமும் எரிக்கின்றனர்.
இதனால் இந்த சாலை எந்த நேரமும் புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால் சில சமயங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதே போல இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்டால் சரியான முறையில் பதில் கூறுவது கிடையாது. இதனால் அடிக்கடி பொதுமக்களுக்கும், பேரூராட்சி ஊழியர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் பல மாதங்களாக குப்பைகளை அள்ளுவதற்கு பதில் சாலை ஓரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் போட்டு தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். இதனால் பேரூராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு உடலில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பல முறை புகார்கள் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பொதுமக்களிடம், அதிகாரிகள் குப்பை கொட்டுவதற்கு இடம் கிடையாது. நீங்கள் குப்பைகளை கொட்டுவதற்கு இடத்தை தேடித்தந்தால் குப்பைகளை எரிப்பதற்கு பதில் அள்ளப்படும் என்று பதில் கூறுகின்றனர். எனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story