நாட்டின் வளர்ச்சிக்கு பசுமை வழிச்சாலை அவசியம், மத்திய மந்திரி பேட்டி
மதுரை விமானநிலையத்தில் மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திரசிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதுரை,
சென்னை–சேலம் பசுமை வழிச்சாலையை விவசாயிகள் எதிர்க்கிறார்கள். ஆனால் நாட்டின் அடிப்படை வளர்ச்சிக்கு பசுமை வழிச்சாலை மிக முக்கியம். அதற்காக இந்த நிலங்கள் தேவைப்படுகின்றன. தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாயம் வளர்ச்சி சார்ந்த நலனை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்சிங், இணை அமைச்சர் கஜேந்திரசிங்ஷெகாவத் ஆகியோர் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் கோவிலின் முக்கிய பிரகாரங்களை சுற்றிப்பார்த்தனர்.
Related Tags :
Next Story