8 வழிச்சாலை திட்டத்தை 90 சதவீதம் பேர் வரவேற்கிறார்கள் - இல.கணேசன் பேட்டி


8 வழிச்சாலை திட்டத்தை 90 சதவீதம் பேர் வரவேற்கிறார்கள் - இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 2 July 2018 4:45 AM IST (Updated: 2 July 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னை–சேலம் 8 வழிச் சாலைக்கு மக்கள் மத்தியில் 90 சதவீதம் வரவேற்பு உள்ளதாக இல.கணேசன் தெரிவித்தார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜனதா எம்.பி.இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது;–

சென்னை–சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு 90 சதவீத பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மக்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சாலை அமைக்க எடுக்கும் இடங்களில் விவசாய நிலங்கள் குறைவு. அந்த நிலத்தின் மதிப்புக்கு அதிகமான ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் பிரச்சினையை தூண்டுகிறார்கள் என்பது தெரிகிறது.

எதிர்க்கட்சியான தி.மு.க.வின் முதல் வார்த்தை திராவிடம், இரண்டாவது வார்த்தையான முன்னேற்றம் என்பது அர்த்தமற்றதாகி விட்டது. வெறும் கழகம் மட்டுமே உள்ளதாக கருதுகிறேன்.

ஜி.எஸ்.டி. வெற்றிகரமாக ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த வரியால் எதிர்பார்த்த அளவை விட அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. இன்னும் முழுமை அடையவில்லை. அதிகமான வரி உள்ள பொருட்களுக்கு இன்னும் வரி குறையும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜி.எஸ்..டி.யை வரவேற்றுள்ளனர்.

ராஜ்ய சபாவில் பேச வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பட்டாசு தொழிலுக்கு வரி விலக்கு குறித்து பேசினேன். வரி விலக்கு கிடைத்தால் பட்டாசு தொழில் மேம்படுவதுடன் அன்னிய செலாவணியும் அதிகரிக்கும். இவ்வாறு கூறினார்.


Next Story