விமானத்தில் பறந்து வந்து கைவரிசை பீகார் மாநில கொள்ளையர்கள் கைது வங்கி ஏ.டி.எம்.களில் லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்
விமானத்தில் சென்னைக்கு பறந்து வந்து வங்கி ஏ.டி.எம்.களில் நூதனமான முறையில் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த பீகார் மாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,

சென்னை ஜமீன் பல்லாவரம் மாரியம்மன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணி செய்கிறார். எழிலகம் வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து ஊழியர் சீனிவாசன் கணக்கில் ரூ.20 ஆயிரம் நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.
இதேபோல ராணுவ வீரர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்தும் அதே ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊழியர் சீனிவாசன் உள்பட 5 பேர் பணத்தை இழந்துவிட்டதாக அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வநாகரத்தினம் வங்கி ஏ.டி.எம். மையத்தின் கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார். திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கியபிரகாசம், அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் எழிலகம் வளாகத்தில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்தபோது, வடமாநில வாலிபர்கள் இருவர் அந்த குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்திற்குள் அடிக்கடி போய் வந்தனர். அவர்களை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர்கள்தான் தேடிய கொள்ளையர்கள் என்று தெரியவந்தது.
கைதானவர்களது பெயர் மனோகர்குமார் (26), முன்னுகுமார் (26) என்று தெரிந்தது. அவர்கள் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் விசாரித்தபோது பணம் கொள்ளையடித்ததை ஒப்புகொண்டனர். அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு பறந்துவந்து ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்துவிட்டு, பின்னர் விமானத்தில் சென்னையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு தப்பி சென்று உள்ளனர்.
ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தது எப்படி? என்று அவர்கள் போலீசாரிடம் பரபரப்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
நாங்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்து வந்தோம். சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நாங்கள் அறை எடுத்து தங்குவோம். பெரும்பாலும் ஏ.டி.எம். மையங்களில் பழைய ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்துதான் கொள்ளையடித்திருந்தோம். புதிதாக பொருத்தப்படும் நவீன ரக ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை கொள்ளையடிப்பது கஷ்டம்.
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பணத்தை எடுக்கும்போது, நாங்கள் திடீரென்று ஏ.டி.எம். மையத்திற்குள் செல்வோம். வாடிக்கையாளர்களிடம் ஏதாவது பேசி அவர்களது கவனத்தை திசை திருப்புவோம். வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துகொண்டு ஏ.டி.எம். எந்திரத்தின் செயல்பாட்டை ‘கேன்சல்’ செய்யாமல் சென்றுவிடுவார்கள்.
அப்போது நாங்கள் மீண்டும் நம்பரை போட்டு பணத்தை எடுப்போம். இதுபோல் எழிலகம் வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் மட்டும் ரூ.1½ லட்சம் வரை பணத்தை எடுத்துள்ளோம். இதேபோல் சிந்தாதிரிப்பேட்டையிலும் ஏ.டி.எம். மையத்தில் பணத்தை கொள்ளையடித்துள்ளோம். வடசென்னையிலும் நாங்கள் கைவரிசை காட்டியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
கைதான கொள்ளையர்களில் ஒருவன் கொள்ளையடித்த பணத்தை தனது தாயாரின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளது தெரிய வந்தது. அந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் மட்டுமே பணத்தை இழந்ததாக புகார் கொடுத்துள்ளனர். இன்னும் நிறைய பேர் பணத்தை இழந்தும், போலீசில் புகார் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது. கொள்ளையர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Tags :
Next Story