போரூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலி-மகன் காயம்


போரூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலி-மகன் காயம்
x
தினத்தந்தி 2 July 2018 4:45 AM IST (Updated: 2 July 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

போரூர் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பூந்தமல்லி,

போரூர் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னை போரூரை அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 58). இவருடைய மகன் சரவணன். நேற்று காலை தாய்-மகன் இருவரும் மோட்டார்சைக்கிளில் வீட்டில் இருந்து போரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்டினார். அவருக்கு பின்னால் தமிழ்ச்செல்வி அமர்ந்து இருந்தார். குன்றத்தூர்-போரூர் சாலையில் போரூர் அருகே இவர்கள் சென்றபோது, திடீரென நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தாய்-மகன் இருவரும் கீழே விழுந்தனர்.


இதில் தமிழ்ச்செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அவருடைய மகன் சரவணன், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான தமிழ்ச்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story