திருவலம் அருகே குடும்ப பிரச்சினையில் மதுவில் விஷம் கலந்து குடித்து தாய், மகள் தற்கொலை
குடும்ப பிரச்சினையில் மதுவில் விஷம் கலந்து குடித்த தாய், மகள் நிலத்தில் பிணமாக கிடந்தனர். தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
குடும்ப பிரச்சினையில் மதுவில் விஷம் கலந்து குடித்த தாய், மகள் நிலத்தில் பிணமாக கிடந்தனர். தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராணிப்பேட்டை அருகே உள்ள திருவலத்தை அடுத்த கண்டிப்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் செல்லய்யா என்கிற சாமுவேல்ராஜ் (வயது 52). இவருடைய மனைவி ராஜேந்திரா (45). இவர்களது மகள் சகுந்தலா (19). சாமுவேல்ராஜ் குடும்பத்தில் குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாமுவேல்ராஜ், ராஜேந்திரா மற்றும் சகுந்தலா ஆகியோர் மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளனர். நேற்று காலை கண்டிப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் நிலத்தில் ராஜேந்திரா, சகுந்தலா ஆகியோர் பிணமாகவும், சாமுவேல்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாகவும் திருவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாமுவேல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாய் - மகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயும், மகளும் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story