குடியாத்தம் அருகே ரூ.27 லட்சத்தில் தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
ஒருங்கிணைந்த ஒதுக்கப்பட்ட வருவாய் மானிய திட்டத்தின்கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
குடியாத்தம்,
குடியாத்தம் ஒன்றியம் தாழையாத்தம் ஊராட்சி தங்கம் நகர் பகுதியில் சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து ஒருங்கிணைந்த ஒதுக்கப்பட்ட வருவாய் மானிய திட்டத்தின்கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ராமு, தங்கம் நகர் குடியிருப்போர் மக்கள் நலச்சங்க தலைவர் துரைவெங்கடேசன், கூட்டுறவு வங்கி முன்னாள் நிர்வாகிகள் ராஜாமணி, தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.கோதண்டன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரமேஷ்குமார், கூட்டுறவு வங்கி முன்னாள் நிர்வாகிகள் செ.கு.வெங்கடேசன், கொட்டமிட்டா பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story