புதிய தொழிற்சாலைகள் உருவாகும்: ‘சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேவை தான்’ வசந்தகுமார் எம்.எல்.ஏ. கருத்து
‘புதிய தொழிற்சாலைகள் உருவாவதற்கு சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேவை தான்‘ என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தகர் பிரிவு சார்பில், காமராஜர் மற்றும் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா, கிராமங்கள்தோறும் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகர் பிரிவு தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார்.
பின்னர் அவர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அங்கு கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான் நடக்கிறது. இந்த ஆட்சியை மிரட்டுகிற வகையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் தெரு, தெருவாக சென்று மக்களிடம் குறைகளை கேட்கிறார். இதை முதல்-அமைச்சர் எதிர்க்கவில்லை. பிரதமரிடமும் கருத்துகள் எதுவும் சொல்வதில்லை.
ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் எல்லாம் எதிர்க்கின்றனர். தமிழகத்தில் இரட்டைமுறை ஆட்சி நடக்கிறது என்று சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக எடுத்துரைத்தோம். இதற்கு, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்த்த ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. உலகமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது. தற்போது, இணையதளம் மூலமாகவே பணப்பரிமாற்றம் நடக்கிறது.
மாற்றங்கள் வருகின்றபோது, சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேவை தான். இதன்மூலம் கால நேரம் மிச்சமாகும். எங்கெல்லாம் புதிய சாலைகள் வருகிறதோ, அங்கெல்லாம் சிறிய தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரம் மேம்படும். முதலில் சிரமமாக இருக்கும். 5 ஆண்டுகளுக்குள் புதிய தொழிற்சாலைகள் உருவாகி மக்களுக்கு உதவி செய்யும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்பட 24 இடங்களில் அவர் கட்சி கொடியேற்றி வைத்தார். இதற்கிடையே, திண்டுக்கல் உழவர் சந்தையை ஆய்வு செய்த அவர் வழியோரங்களில் இருந்த கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Related Tags :
Next Story