மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 155 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி கோவேந்தன், ஓசூர் தொகுதி பொறுப்பாளர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் சேதுமாதவன் ஆகியோர் பேசினார்கள்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் வெங்கடேஷ், காங்கிரஸ் கட்சி மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா மற்றும் ஜெய்பீம் பேரவை நிர்வாகிகள், மஜ்லீஸ் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென அவர்கள் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அந்த நேரம் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சிலர் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 4 பெண்கள் உள்பட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story