வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை,
தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் செல்வபுரம் போலீசார் கோவை காந்திபார்க் அருகே உள்ள பொன்னையாராஜபுரம் கிருஷ்ணாநகரில் உள்ள ஒரு வீட்டுக்கு நேற்று சென்றனர். ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே அதிகாரிகள் அந்த வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். அப்போது வீட்டில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28-ந் தேதி கோவை தாமஸ் வீதியில் 1,130 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது பொன்னையாராஜபுரம் பகுதியில் வீட்டில் பூட்டை உடைத்து சோதனை நடத்தி, 40 பெட்டிகளில் ஹான்ஸ், வி 1 புகையிலை மற்றும் 36 மூட்டைகளில் இருந்த குட்கா பாக்கெட்டுகள் உள்பட 1,500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தோம். அவற்றின் மதிப்பு ரூ.17 லட்சம் இருக்கும். இந்த வீட்டின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. எனவே அந்த வீட்டுக்கு சீல் வைத்து உள்ளோம். தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வீட்டை சோதனை செய்யும் போது வட மாநிலத்தை சேர்த்த ஷர்வான்குமார் என்பவர் வந்துள்ளார். அவர் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடி விட்டார். எனவே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது, கோவையில் வைத்து தயாரிக்கப்படுகிறதா அல்லது வெளிமாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வரப்படுகிறதா?. கோவையில் எப்படி வினியோகம் செய்யப்படுகிறது? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story