வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வார்டு மறுசீரமைப்பு பட்டியல் கலெக்டர் ராமன் வெளியிட்டார்
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வார்டு மறுசீரமைப்பு பட்டியலை கலெக்டர் ராமன் வெளியிட்டார்.
வேலூர்,
இந்திய தேர்தல் ஆணையம் நகரப்பகுதிகளில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் கூடுதலாக வாக்காளர்கள் இருந்த வாக்குச்சாவடிகளை பிரிக்கும் பணி மற்றும் குறைந்த வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் அருகேயுள்ள வாக்குச்சாவடிகளுடன் ஒன்றாக இணைப்பதற்கான மறுசீரமைப்பு பணிகள் நடந்தன.
வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 439 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வேலூர் மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் 2 வாக்குச்சாவடிகளும், கிராமப்பகுதிகளில் 16 வாக்குச்சாவடிகளும் என 18 வாக்குச்சாவடிகளும் புதிதாக உருவாக்கப்பட்டன.
அதே போன்று நகரப்பகுதிகளில் குறைவான வாக்காளர்கள் கொண்ட 4 வாக்குச்சாவடிகளும், கிராமப்பகுதிகளில் 3 வாக்குச்சாவடிகளும் அருகேயுள்ள வாக்குச்சாவடிகளுடன் இணைக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வார்டு மறுசீரமைப்பு பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, வார்டு மறுசீரமைப்பு பட்டியலை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். கலெக்டர் பேசுகையில், “வார்டு மறுசீரமைப்புக்கு பின்னர் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 450 வாக்குச்சாவடிகள் உள்ளன. வார்டு மறுசீரமைப்பு தொடர்பான ஆட்சேபனை இருந்தால் வருகிற 10-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தை அணுகி கருத்துகளை தெரிவிக்கலாம்” என்றார்.
நிகழ்ச்சியில், உதவி கலெக்டர்கள் மேக்ராஜ், பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் தாசில்தார் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story