4 வழி சாலைக்கு நிலம் அளவிடும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - அதிகாரிகள் ஓட்டம்
ஊத்துக்கோட்டை அருகே 4 வழி சாலைக்கு நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே 4 வழி சாலைக்கு நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயந்த போன அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 4 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த சாலை பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை, நாகலாபுரம், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.
இந்த 4 வழி சாலை அமைக்க நிலம் அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணை பகுதியில் நேற்று முன்தினம் மாலை அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னங்காரணையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் நிலம் அளவிடும் பணிகளை தடுத்து நிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளை நிலங்களை அபகரித்து சாலைபோட ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பயந்து போன அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் பொதுமக்களும், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story