சங்கரன்கோவிலில் ஆடித்தவசு விழா: பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
சங்கரன்கோவிலில் ஆடித்தவசு விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் ஆடித்தவசு விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சைவ–வைணவ தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா நடைபெறுவது வழக்கம். விழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 17–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது.
ஆடித்தவசு திருவிழா ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நகரசபை என்ஜினீயர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:–
பக்தர்களுக்கு குடிநீர் வசதிநான்கு ரதவீதிகளையும் சுத்தமாக வைத்திருப்பது, விழா காலங்களில் மின்சாரம் தடையின்றி சீராக வழங்குவது, கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்தல், ஆடித்தவசு திருவிழா அன்று அரசு மருத்துவமனைக்கு அருகில், திருவேங்கடம் சாலையில் புறநகர் பஸ்நிலையம், ராஜபாளையம் ரோடு பகுதியில் தீயணைப்பு துறைக்கு சொந்தமான இடத்திலும், புளியங்குடி ரோடு கோவிந்தப்பேரி தெப்பம் உள்ளிட்ட 4 இடங்களிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பது.
விழாவுக்கு தேவையான அளவில் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல், நகரில் உள்ள அனைத்து உணவு விடுதிகளிலும், சுகாதாரமான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.