ஆவின் நிறுவனத்தில் முதன்மை தொழிற்சாலை உதவியாளர் பணி: தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள முதன்மை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள முதன்மை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
காலி பணியிடங்கள்தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் 275 முதன்மை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடத்துக்கான கல்வி தகுதிகள் பிளஸ்–2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி ஆகும்.
இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இனசுழற்சி, மொத்த பணிக்காலி இடங்கள் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்த விவரம், www.omcaavinsfarccruitment.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது.
கடைசி நாள்இந்த விவரங்களை முழுமையாகவும் கவனமாகவும் படித்து தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcaavinsfarccruitment.com என்ற இணையதள முகவரியில் வருகிற 16–ந்தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.