பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி 7 பேர் கைது
சேத்துப்பட்டு அருகே பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு,
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் பணிக்காக திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள ஆத்துரை, தச்சாம்பாடி, கொளக்கரவாடி, கரிப்பூர் ஆகிய ஊர்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு நிலம் அளவிடும் பணி நேற்று தொடங்கியது.
இந்த நிலையில் ஆத்துரையில் தாசில்தார்கள் தமிழ்மணி, அரிதாஸ் மற்றும் அலுவலர்கள் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், சேத்துப்பட்டு சப் - இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்துரை கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சுந்தர், குணசேகர் ஆகியோர் எங்கள் நிலத்தில் அளவு கல் நடக்கூடாது என்றும், பசுமை வழிச்சாலை தேவையில்லை என்றும் கூறி கையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை திடீரென உடலில் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் நிலம் அளவு கல் நடும் பணி நடைபெற்றது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

Related Tags :
Next Story