பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 July 2018 4:30 AM IST (Updated: 4 July 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள வதிஷ்டபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, தொழிலாளி. தற்போது இவர் தனது குடும்பத்துடன் நெடுங்குளம் கிராமத்தில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது மகள் ராஜபிரியா (வயது 16). இவர் கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜபிரியா தனது துப்பட்டாவால் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜபிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து, ராஜபிரியா உடல் நலக்கோளாறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story