திராவகம் வீசிய பெண்ணை திருமணம் செய்த ஆயுள் தண்டனை கைதி ஜெயிலில் இருந்து விடுவிப்பு ஐகோர்ட்டு உத்தரவு


திராவகம் வீசிய பெண்ணை திருமணம் செய்த ஆயுள் தண்டனை கைதி ஜெயிலில் இருந்து விடுவிப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 July 2018 4:00 AM IST (Updated: 4 July 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

திராவகம் வீசிய பெண்ணை திருமணம் செய்த ஆயுள் தண்டனை கைதியை ஜெயிலில் இருந்து விடுவித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை, 

திராவகம் வீசிய பெண்ணை திருமணம் செய்த ஆயுள் தண்டனை கைதியை ஜெயிலில் இருந்து விடுவித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை

ரத்னகிரி, கேட் பகுதியை சேர்ந்தவர் வாலிபர் அனில் பாட்டீல். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி தன்னை திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி மீது திராவகத்தை ஊற்றினார். இதில் கல்லூரி மாணவியின் முகம் மற்றும் தோள்பட்டை பகுதி வெந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அனில் பாட்டீலை கைது செய்தனர். கல்லூரி மாணவி மீது திராவகத்தை வீசிய வாலிபருக்கு கேட் செசன்ஸ் கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பரில் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

திருமணம் செய்ததால் விடுவிப்பு

இதை எதிர்த்து அனில் பாட்டீல் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், நான் திராவகம் வீசி பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். மேலும் அவரது அறுவை சிகிச்சைக்காக எனது தோலை தானமாக வழங்க உள்ளேன். அந்த பெண்ணுடன் எனது வாழ்க்கையை நிம்மதியாக தொடர விரும்புகிறேன். எனவே என்னை இந்த வழக்கில் குற்றம் அற்றவர் என கூறி விடுதலை செய்யவேண்டும் என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கல்லூரி மாணவி மீது திராவகத்தை வீசிய வாலிபரை குற்றம் அற்றவர் என கூற மறுத்துவிட்டது. எனினும் 8 ஆண்டுகள் ஜெயிலில் கழித்துவிட்டதால் கோர்ட்டு அந்த வாலிபரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அந்த வாலிபர் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Next Story