சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலை தொடர்ந்து பெண்கள் சிறைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம்
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை தொடர்ந்து பெண்கள் சிறைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் அமைக்க மராட்டிய மகளிர் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
மும்பை,
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை தொடர்ந்து பெண்கள் சிறைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் அமைக்க மராட்டிய மகளிர் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம்
மும்பை பைகுல்லா சிறையில் கடந்த ஆண்டு பெண் கைதி ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறைச்சாலைகளின் உள்கட்டுமானம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில மகளிர் கமிஷனுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள அனைத்து பெண்கள் சிறைகளிலும் மகளிர் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலான சிறைச்சாலைகளில் சானிட்டரி நாப்கின் வசதிகள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெண்கள் சிறைகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சோதனை முயற்சியாக கோலாப்பூர் மாவட்ட சிறையில் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட தொடங்கியது. இந்தநிலையில் மாநிலத்தின் பிற சிறைகளுக்கு இதனை விரிவுபடுத்த மராட்டிய மகளிர் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மராட்டிய மகளிர் கமிஷன் தலைவர் விஜயா ரஹாத்கர் கூறியதாவது:-
ஒரு மாத காலத்துக்குள்...
சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் அமைப்பது தொடர்பான பணிகள் எரவாடா, தானே, அவுரங்காபாத், நாக்பூர், அமராவதி, கல்யாண், பைகுல்லா மற்றும் சந்திராப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் சிறைகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story