ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்


ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 July 2018 5:06 AM IST (Updated: 4 July 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மீஞ்சூர், 

மீஞ்சூர் அருகே அனுப்பம்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அனுப்பம்பட்டு தாங்கல் ஏரி 240 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறுகளின் நீர் வரத்து பகுதியாகவும் விளங்குகிறது.

இலவம்பேடு ஏரியில் இருந்து 200 மீட்டர் அகலத்திற்கு நீர் வரத்து பகுதி அமைந்து உள்ள நிலையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஏரி நீர் வரத்து பகுதி மிகவும் சுருங்கிய நிலையில் மழை காலங்களில் வெள்ளம் ஏரிக்கு வருவதில் சீரமம் ஏற்படுவதாகவும், இதனால் அந்த பகுதி விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக கூறி ஆரணி ஆறு உபகோட்ட நீர்வள ஆதார அமைப்பான பொது பணித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பம்பட்டு பகுதி மக்கள் புகார் செய்தனர்.

போராட்டம்

இந்த நிலையில் தமிழக அரசின் பொது பணித்துறையால் குடிமராமத்து பணிகள் அனுப்பம்பட்டு ஏரியின் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இலவம்பேடு ஏரியின் நீர் வரத்து பகுதியில் இருந்து அனுப்பம்பட்டு ஏரி வரை ஆக்கிரமிப்புகள் உள்ளது.

இதனை அகற்றி அளவீடு செய்து குடிமராமரத்து பணி தொடங்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் ஏரியில் நடைபெறும் பணிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கைவிடப்பட்டது

பணியில் ஈடுபட்டு வந்த 2 பொக்லைன் எந்திரங்கள் கரைக்கு திரும்பிய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து பொது பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏரியின் அளவீடுகள் வருவாய் துறையினரிடம் உள்ளதாகவும் அவர்கள் நில அளவை செய்து ஒதுக்கீடு செய்தால் நாங்கள் குடிமராமரத்து பணியை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என கூறினர்.

Next Story