மாணவ-மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலாபாரதி விருது விண்ணப்பிக்க வேண்டுகோள்
பாரதி யுவகேந்திரா சார்பில் மாணவ-மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருது வழங்கப்படவுள்ளது. இத விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி உள்பட அந்தஸ்து துறைகளில் சிறந்து விளங்கும் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருதும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தர் விருதும் மாவட்டந்தோறும் வழங்கப்படவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மாவட்டத்துக்கு 200 பேருக்கு விருதுகள் வழங்கப்படும். இதற்கான விழா அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும். கோவை ஆர்ஷவித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி விருதுகளை வழங்க இருக்கிறார்.
தகுதியுடையோர் தாங்கள் பெற்ற பரிசுக்கான நகல் பிரதிகளுடன் தங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணுடன் மதுரை கோச்சடை, சாந்தி சதன் குடியிருப்பில் உள்ள பாரதி யுவ கேந்திராவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.
மேலும் அரசு பொதுத்தேர்வுகளில் கடந்த 3 ஆண்டுகளில் 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மதிப்பெண் நகலுடன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாள் விண்ணப்பித்தோரின் வீட்டு முகவரிக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story