சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்: கன்னியாகுமரியில் 9 டன் அரிசியை குவித்து வைத்து அன்னபூஜை
சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் 9 டன் அரிசியை குவித்து வைத்து அன்னபூஜை நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி,
சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள காஞ்சி அரங்கத்தில் நேற்று அன்ன பூஜை நடந்தது.
இதனையொட்டி காலை 10 மணிக்கு கேந்திர ஊழியர்கள் சார்பில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து விவேகானந்த கேந்திர இணை பொதுச்செயலாளர் ரேகாதவே குத்துவிளக்கேற்றினார். விவேகானந்த கேந்திர அகில பாரத துணை தலைவர் நிவேதிதா தலைமை தாங்கினார். நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் முன்னிலை வகித்தார். கேந்திர மூத்த ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆசியுரை வழங்கினார். அன்னபூஜைக்கான அரிசியை கேந்திர தொண்டர் செங்கோட்டை மாடசாமி வழங்க அகில பாரத பொதுச்செயலாளர் பானுதாஸ் பெற்று கொண்டார்.
கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் அன்ன பூஜையை பற்றி எடுத்துரைத்தார். அன்ன பூஜைக்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற தொண்டர்களால் நன்கொடையாக 20 டன் அரிசி பெறப்பட்டு இருந்தது.
அதில் 9 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அன்னபூஜை நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர். மதியம் பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு விவேகானந்த கேந்திர ஊழியர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Related Tags :
Next Story