மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மயங்கி விழுந்து சாவு
அய்யம்பேட்டை அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மயங்கி விழுந்து இறந்தார். இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அய்யம்பேட்டை,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள நெடுந்தெரு மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருடைய மனைவி ஜெகதாம்பாள்(வயது 60). சவுந்தர்ராஜன் இறந்து விட்டார். இதனால் ஜெகதாம்பாள் தனது 2 மகன்கள் மற்றும் 2 மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
ஜெகதாம்பாளின் இளைய மகன் சைமன்ராஜ், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனால் ஜெகதாம்பாள் தனது மூத்தமகன் செல்லப்பன்(40) குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்லப்பனுக்கு திடீரென இதயகோளாறு ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த செல்லப்பனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை வீட்டில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த போதே செல்லப்பன் இறந்து விட்டார். இதனால் துக்கம் தாங்க முடியாமல் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மகனை இழந்த வேதனை தாங்க முடியாமல் ஜெகதாம்பாள் அழுது கொண்டே இருந்தார். அப்போது அவர் திடீரென தனது மகன் உடல் மீது சாய்ந்தபடி மயங்கி விழுந்தார். அவரது மயக்கத்தை தெளிய வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்தனர். ஆனால் ஜெகதாம்பாள் உடலில் எந்த அசைவும் இல்லை. அப்போது அவரும் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தாய்-மகன் இருவரது உடல்களையும் ஒரு சேர வைத்து குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் இருவரது உடல்களையும் அருகே உள்ள மயானத்துக்கு எடுத்து சென்று ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.
ஒரு மகனை பறிகொடுத்து சோகத்தில் இருந்த தாய், தனது இன்னொரு மகனையும் இழந்த துக்கம் தாங்க முடியாத அதிர்ச்சியில் உயிர் துறந்த சம்பவம் அய்யம்பேட்டை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Tags :
Next Story