சென்னிமலையில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


சென்னிமலையில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 July 2018 4:30 AM IST (Updated: 5 July 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை,

சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சென்னிமலை பஸ் நிலையம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததோடு, டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கரூரில் இருந்து ஊத்துக்குளிக்கு லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அதே பகுதியில் மற்றொரு லாரி வந்தது. அந்த லாரியை சோதனை செய்ததில் அதிலும் மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணல் கடத்திய இந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லாரிகளும் பெருந்துறை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

துணை தாசில்தார் பாலமுருகாயி, மணல் கடத்திய 2 லாரிகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவிக்கு பரிந்துரை செய்து உள்ளார்.

Next Story