தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பாஸ்பாரிக் அமிலம் அகற்றும் பணி தொடங்கியது 10 ஜெனரேட்டர்கள் பொருத்தி தீவிரம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பாஸ்பாரிக் அமிலம் அகற்றும் பணி தொடங்கியது 10 ஜெனரேட்டர்கள் பொருத்தி தீவிரம்
x
தினத்தந்தி 6 July 2018 3:00 AM IST (Updated: 6 July 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பாஸ்பாரிக் அமிலத்தை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பாஸ்பாரிக் அமிலத்தை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கடந்த மே மாதம் 28–ந் தேதி மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலையில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த ஒரு கந்தக அமிலம் கண்டெய்னரில் சிறிய கசிவு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்த 2 ஆயிரத்து 124 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது.

பின்னர் தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் அகற்ற உத்தரவிடப்பட்டது.

பாஸ்பாரிக் அமிலம்

அதன்படி கடந்த 2–ந் தேதி முதல் கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 4–வது நாளாக ரசாயனங்களை அகற்றும் பணி நடந்தது. 13 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் கொண்டு செல்லப்பட்டது. இதுவரை மொத்தம் 43 டேங்கர் லாரிகள் மூலம் 860 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளது.

அதே போன்று பாஸ்பாரிக் அமிலம் அகற்றும் பணி நேற்று முதல் தொடங்கியது. 2 டேங்கர் லாரிகளில் பாஸ்பாரிக் அமிலம் கொண்டு செல்லப்பட்டது.

ஜெனரேட்டர்கள்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, ‘ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த ரசாயனங்கள் சேகரித்து வைக்கப்பட்டு உள்ள பகுதியில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்படி மொத்தம் 10 ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. எரிவாயு (எல்.பி.ஜி.), டீசல் உள்ளிட்டவைகளை அகற்றுவதற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலையில் உள்ள தோட்டங்களுக்கு தண்ணீர் விடும் பணியும் நடக்கிறது’ என்று கூறினார்.


Next Story