கம்பத்தில் உள்ள ஆலமரத்துக்குளம் தூர்வாரும் பணி தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி


கம்பத்தில் உள்ள ஆலமரத்துக்குளம் தூர்வாரும் பணி தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 6 July 2018 12:57 AM IST (Updated: 6 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் உள்ள ஆலமரத்துக்குளத்தில் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பம்,


கம்பம் பகுதியில் உள்ள புதுக்குளம், ஆலமரத்துக்குளம், சிக்காலி குளம் உள்ளிட்ட குளங்களை தூர்வார வேண்டும் என ஒருங்கிணைந்த நீரோடி பகுதி விவசாயிகள் கமிட்டி சார்பில் மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக ஆலமரத்துக்குளத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தூர்வாரும் பணி தீவிரமாக நடக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர்வாரப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கம்பத்தில் இருந்து ஏகலூத்து செல்லும் வழியில் உள்ள ஆலமரத்துக் குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. மழைக்காலங்களில் மேற்குதொடர்ச்சி மழை அடிவாரத்தில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரானது 3 கிலோ மீட்டர் தூரம் ஓடைகள் வழியாக ஆலமரத்துக்குளத்திற்கு வந்தடையும். இந்த பாதையை விவசாயிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்து. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் சிக்காலி குளம், புதுக்குளத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தூர்வார மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த குளங்களை தூர்வாரும் போது பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பெறும் என்றனர்.

Next Story